பிரதேச சபையை ஸ்தாபித்தல்
1871 கிராமசபைகளின் சட்டத்தின் கீழ் அந்தந்த பகுதிகளில் பரிபாலன இலகுவிற்காக உள்ளூராட்சி மன்றங்களை பிரித்தானிய அரசாங்கத்தினால் நிறுவப்பட்டது. இக்கிராம பரிபாலன சபையின் கீழ் தெரணியகல பிரதேச சபையானது அடுலுகம, பனாவல,தெகோரலே கிராம சபைக்கு உரித்தானது.
அடுலுகம பனாவல தெகோரலே கிராமசபை 1964 ஜுலை 26 திகதியில் 14080 இலக்கத்தில் இலங்கை அரசாங்க வர்த்தமானி அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் தெரணியகல கிராம சபை பனாவல கோரலை கிராம சபை தெயியோவிட்ட சிறிய நகர சபை என்ற பெயரில் மூன்று உள்ளூராட்சி மன்றங்களாக பிரிக்கப்பட்டது.
அவ்வாறு பிரிக்கப்பட்ட தெரணியகல கிராம சபையில் 25 கிராமசபைப் பிரிவுகள் 1964 செப்டெம்பர் 30 தினத்தில் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
தெரணியகல கிராம சபைக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 1965 ல் நடத்தப்பட்ட முதல் தேர்தல் மூலம் உறுப்பினர்கள் 25 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவ்வாறு நடத்தப்பட்ட தெரணியகல கிராம சபை 1900 ஆண்டு 35 ம் இலக்கத்தின் கீழ் மாவட்ட அபிவிருத்தி சபையின் துணை காரியாலயமாக தெரிவுசெய்யப்பட்டது. இக்காலத்தில் இலங்கையில் 547 கிராம சபைகளும் 83 சிறிய நகர சபைகள் இருந்தன.
இக்கிராம சபைகள் 547ம் சிறிய நகர சபைகள் 83ம் சேர்த்து இலங்கையிலுள்ள 24 மாவட்டங்களில் 24 அபிவிருத்தி சபைகள் 24 நிறுவப்பட்டன. இம்முறையின் கீழ் குறைப்பாடுகள் மற்றும் எதிர்பார்த்த விடயங்கள் நிறைவேறாமையின் காரணமாக 1987ல் 15ம் இலக்க கட்டத்தின் பிரதேச சபை முறையின் கீழ் பிரதேச சபைகள் நிறுவப்பட்டது.
இதன் கீழ் தற்போது இலங்கையில் 256 பிரதேச சபைகள் நடைமுறையில் உள்ளதோடு இவை தெரணியகல பிரதேச செயலகத்திற்கு உரித்தான பிரதேசங்கள் 1988 ஜனவரி 01 திகதியில் இருந்து தெரணியகல பிரதேச சபை என்ற பெயரில் நிறுவப்பட்டது.